இந்திய விமானப்படை தளபதி இஸ்ரேலுக்கு வருகை..!

Default Image

இந்திய விமா­னப் படைத் தள­பதி ஆர்.கே.எஸ். பதா­ரியா நேற்று இஸ்ரேல் சென்றடைந்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த பயணம் அமைந்துள்ளது. இஸ்ரேலில், ஆர்.கே.எஸ். பதா­ரியா மற்றும் அவரது இணை மேஜர் ஜெனரல் அமிகம் நோர்கின், இஸ்ரேல் விமானப்படை தளபதி ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு பற்றி விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்திய விமானப்படை ஒரு அறிக்கையில், ஆர்.கே.எஸ். பதா­ரியா இஸ்ரேலுக்குச் செல்வதற்கு முன், ஆகஸ்ட் 1 ஆம் தேதி, ஐக்கிய அரபு எமிரேட் விமானப்படை மற்றும் விமானப் பாதுகாப்பு (UAE AF & AD) தளபதி மேஜர் ஜெனரல் இப்ராகிம் நாசர் எம். அல் அலவியை சந்தித்தார். அப்போது  இரு விமானப் படைகளுக்கிடையேயான வலுவான உறவை மேலும் வலுப்படுத்துவதற்கானஅளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live
arrest
bipin rawat accident pilot
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai