சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை..!
சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் கேட்ட கேள்விக்கு விமானநிலைய அதிகாரிகள் ஆர்டிஐயில் பதில் அளித்துள்ளனர். அதில், சென்னை விமான நிலையத்தில் அண்ணா, காமராஜர் பெயர்கள் நீக்கப்படவில்லை எனவும் கட்டுமானப் பணிகள் நடப்பதால் பெயர்ப்பலகை அப்புறப்படுத்தப்பட்டுள்ளது என விமானநிலைய அதிகாரிகள் பதில் அளித்தனர்.