உள்ளாட்சி தேர்தல் – நாளை முதல் அதிமுக ஆலோசனை..!
உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து நாளை முதல் 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, நாளை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நெல்லை, தென்காசி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என கூறப்பட்ட நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.