சுதந்திர தின விழா- ஒலிம்பிக் குழுவை அழைக்கும் பிரதமர் மோடி..!
ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் கலந்துகொள்ள செங்கோட்டைக்கு ஒலிம்பிக் குழுவை பிரதமர் மோடி அழைக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் டோக்கியோ ஒலிம்பிக்கில் 120 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் உட்பட 228 பேர் கொண்ட குழு இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளது.மேலும்,இந்திய அணிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் வார்த்தைகளை பிரதமர் வழங்கி வருகிறார்.
இந்நிலையில்,பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று தனது எட்டாவது சுதந்திர தின உரையை நிகழ்த்தவுள்ளார்.இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக டோக்கியோ சென்றுள்ள ஒலிம்பிக் குழுவை,சிறப்பு விருந்தினர்களாக செங்கோட்டைக்கு அழைக்கிறார் என்றும்,மேலும், பிரதமர் மோடி,ஒலிம்பிக் குழுவை தனது இல்லத்திற்கு அழைத்து தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவார் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
On 15th August, Prime Minister Narendra Modi will invite the entire Indian Olympics contingent to the Red Fort as special guests. He will also personally meet and interact with all of them around that time.#Olympics pic.twitter.com/Sw0rbENdVb
— ANI (@ANI) August 3, 2021