#Breaking:மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றம் கேள்வி…!

Default Image

மருத்துவப்படிப்பு இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மருத்துவபடிப்பு அகில இந்திய இட ஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10% ஒதுக்கீடு 50% வரம்பிற்குள் வருகிறதா என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

அதாவது,மருத்துவப்படிப்பு மற்றும் மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையில்,அகில இந்திய இட ஒதுக்கீட்டில் மாநில அரசுகளுக்கு அளிக்கப்படும் ஒதுக்கீடுகள் முறையாக வழங்கப்பட வேண்டும்,குறிப்பாக தமிழக அரசுக்கு 69% ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்று கடந்த ஆண்டு திமுக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால்,கடந்த ஆண்டு மாணவர் சேர்க்க அமல்படுத்த முடியாது என்பதால் மத்திய ,மாநில அரசுகள் இணைந்து ஒரு குழு அமைத்து 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கவேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது.ஆனால்,குழு மட்டும் அமைக்கப்பட்டு,பரிந்துரைகள் வழங்கப்பட்டு,அதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில்,இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படவில்லை.

இதற்கிடையில்,இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்குவதாக மட்டுமே மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில்,இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில்,கடந்த ஆண்டு உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் 69% இடஒதுக்கீட்டை மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில்,அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை?, அதனை நிறைவேற்றுவதுதான் நீதிமன்ற உத்தரவை மதிப்பதாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும்,பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு குறிப்பாக 50% இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில்,தற்போது 10% மட்டுமே ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.இதனால்,50 சதவீதத்தில் குறைபாடு ஏற்படும் என்பதால்,இந்த 10% ஒதுக்கீடு என்பது 50% இட ஒதுக்கீட்டில் வருமா? அல்லது தனியே வருமா? என்று மத்திய அரசிடம் தலைமை நீதிபதி அமர்வு கேள்வி எழுப்பி வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்