அத்தனையையும் தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் – சினேகன் உருக்கம்.!
அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான் என்று பாடலாசிரியர் சினேகன் ட்வீட் செய்துள்ளார்.
பாடலாசிரியரும், மக்கள்நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளருமான சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனை தொடர்ந்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த ஜூலை – 29 திருமணம் செய்துகொண்டனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அனைவரது நலன் கருதி மிக எளிமையாகவும், தனிமனித இடைவெளியோடும், அரசு விதிமுறைகளோடும் சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், பாடலாசிரியர் சினேகன் தனது ட்வீட்டர் பக்கத்தில் தான் பட்ட அவமானங்கள் அனைத்தும் தாங்கி கொண்டது தனது திருமணத்திற்காகத்தான் என்று உருக்கமாக ட்வீட் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பது, எத்தனை விமர்சனங்கள்,எத்தனை கிசுக்கிசுக்கள், எத்தனை ஏளனங்கள், எத்தனை அவமதிப்புகள், அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது இப்படி ஒரு தருணத்திற்காகத்தான்” என்று தெரிவித்துள்ளார்.
எத்தனை விமர்சனங்கள்…
எத்தனை கிசுக்கிசுக்கள்…
எத்தனை ஏளனங்கள்…
எத்தனை அவமதிப்புகள்…அத்தனைகளையும் ரணங்களோடு தாங்கிக் கொண்டது.
இப்படி ஒரு தருணத்திற்காகத்தான். pic.twitter.com/QArgnaaPgi
— Snekan S (@KavingarSnekan) August 2, 2021