மயங்க் அகர்வால் முதல் டெஸ்டில் இருந்து விலகல் – பிசிசிஐ அறிவிப்பு ..!
மயங்க் அகர்வால் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இருந்து விலகினார்.
இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை மறுநாள் நாட்டிங்ஹாமில் தொடங்குகிறது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் காயம் காரணமாக விலகியுள்ளார். மயங்க் அகர்வால் இன்று வலைகளில் பயிற்சியில் பேட்டிங் செய்யும் போதுகாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடக்க ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் இன்று நாட்டிங்ஹாமில் உள்ள ட்ரெண்ட் பிரிட்ஜில் வலை பயிற்சியில் பேட்டிங் செய்யும் போது சக வீரர் முகமது சிராஜின் வீசி பந்து மயங்க் அகர்வால் ஹெல்மெட் மீது அடித்ததில் காயம் ஏற்பட்டது. இதனால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இருந்து மயங்க் அகர்வால் விலக்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டது.
இரண்டு நாட்களில் தொடங்கும் முதல்டெஸ்டில் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்புள்ளது.
NEWS ????- Mayank Agarwal ruled out of first Test due to concussion.
The 30-year-old is stable and will remain under close medical observation.
More details here – https://t.co/6B5ESUusRO #ENGvIND pic.twitter.com/UgOeHt2VQQ
— BCCI (@BCCI) August 2, 2021