#BREAKING : உண்மையில் இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்
இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன்.
இன்று தமிழக சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சட்டமன்ற தலைவர் சபாநாயகர் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குடியரசு தலைவருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசுகளை வழங்கினார். இதனையடுத்து, தமிழக சட்டமன்றத்தில் 15 தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ள நிலையில், 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைத்துள்ளார்.
அதன்பின் உரையாற்றிய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்திய வரலாற்றின் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் படத்தை திறந்ததில் மகிழ்கிறேன். உண்மையில் இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் என தமிழில் உரையாற்றினார்.
மேலும், புரட்சிகரமான எண்ணங்களால் சமூக சீர்திருத்தங்களுக்கு வித்திட்டவர் கருணாநிதி. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுக்கொடுத்தவர் கலைஞர். தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் சினிமாவிற்கும் பெரும் பங்காற்றியவர். மந்திரம் கற்போம்; வினைத் தந்திரம் கற்போம்; வானை அளப்போம் கடல் மீனை யளப்போம் என்ற மகாகவி பாரதியாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி உரையாற்றினார். மேலும், நம் நாடு இந்த வருடம் பல துறைகளில் சாதனை படைத்துள்ளது என தெரிவித்தார்.