முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்- முதல்வர் உருக்கம்..!

Default Image

கருணாநிதியின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை பெருமையாக கருதுகிறேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டமன்ற நூற்றாண்டு விழவையொட்டி தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். ‘காலம் பொன் போன்றது’ ‘கடமை கண் போன்றது’ என கருணாநிதி படத்தின் கீழ் வாசகம் இடம்பெற்றுள்ளது.

சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 1921-ஆம் ஆண்டு நடைபெற்றது. பார் போற்றும் பல்வேறு சட்டங்களை நிறைவேற்றியது தமிழக சட்டப்பேரவை. விளிம்பு நிலை மக்களின் நலனுக்காக இந்த சட்டப் பேரவை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கு பல முன்னோடி திட்டங்களை உருவாக்கித் தந்தது தமிழ்நாடு சட்டமன்றம். வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. இந்தியாவின் முதல் குடிமகன், தமிழ் அன்னையின் தலைமகன் திருவுருவ படம் திறந்து வைத்ததை எண்ணி தமிழ்நாட்டின் முதல்வராக மகிழ்கிறேன், கலைஞரின் மகனாக நெகிழ்கிறேன்.

சட்டப்பேரவையின் வைர விழா கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது.  முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கருணாநிதி. காந்தக்குரலால் தமிழக மக்களை கட்டி போட்டு வைத்தவர் கருணாநிதி, சமூக நீதிக்காக பாடுபட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி, பல்வேறு சீர்திருத்த சட்டங்களை நிறைவேற்றியவர் கருணாநிதி, கருணாநிதியின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்ததை பெருமையாக கருதுகிறேன் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர் அப்பாவு, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன்,கே.எஸ் அழகிரி, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் மற்றும் அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.அதிமுக புறக்கணித்த நிலையில் பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை விழாவில் கலந்துகொண்டார்.

சென்னை மாகாணத்தில் 1921 ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் 16-வது தலைவராக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றுள்ளது. தமிழக முதல்வராக 5 முறையும், சட்டமன்ற உறுப்பினராக 13 முறையும் இருந்தவர் கருணாநிதி என்பது

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RCB vs RR - IPL 2025
PM Modi - Pakistan PM
Indian BSF PK Singh arrested by Pakistan Army
india vs pakistan war
Indian Navy test-fires missile
Indian PM and Pakistan PM