கலிபோர்னியா காட்டு தீ : 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசம்…!

Default Image

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டு தீயில் இதுவரை 2.44 லட்சம் ஏக்கர் நிலம் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் பரவி வரக்கூடிய காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் குறித்து கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி இதுவரை கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 2.44 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது, இது  வனப்பகுதியில் 32% எனவும் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தீயின் காரணமாக இதுவரை 69 கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளதாகவும், ஒன்பது கட்டிடங்கள் சேதாரமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வனத்தீ அமெரிக்கா முழுவதும் உள்ள 83 க்கும் மேற்பட்ட வனப்பகுதியில் பரவி வருவதாகவும், இதனால் 10,435 கட்டிடங்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை ஒட்டு மொத்தமாக 400 கட்டடங்களும் 348 வாகனங்களும் இந்த தீயால் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள இந்த தீக்கு காரணமானவர்களை தேடி வருவதாகவும் அம்மாகாண வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்