நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள்.., தங்கம் வெல்ல வாழ்த்துக்கள் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
அரையிறுதிக்குள் தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு.
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. இதன்மூலம், ஒலிம்பிக் வரலாற்றில் முதல்முறையாக இந்திய மகளிர் அணி,மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.
நாளை மறுநாள் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை அரை இறுதியில், இந்திய மகளிர் அணி எத்ரிகொள்கிறது. அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய மகளிர் ஹாக்கி அணி அரையிறுதிக்கு முன்னேறியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளீர்கள் என்றும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வெற்றி பெற்று தங்கம் வெல்ல வாழ்த்துகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
I am absolutely delighted at the victory of Indian women’s #Hockey team against Australia to storm into the semi-finals. You’re scripting history. I wish you all the best to enter the finals and clinch the #Olympics #Gold.#Tokyo2020 https://t.co/LIaT0bEHY7
— M.K.Stalin (@mkstalin) August 2, 2021