பிரதமர் மோடியுடன் ஐஸ்கிரீம் சாப்பிடவுள்ள பிவி சிந்து -பிவி ரமணா தகவல்..!

Default Image

பிரதமர் நரேந்திர மோடியுடன் பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து,ஐஸ்கிரீம் சாப்பிடுவார் என்று அவரது தனத்தை பிவி ரமணா தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து,நேற்று நடைபெற்ற  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஹி பிங் ஜியாவோவை 21-13,21-15 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கல பதக்கம் வென்றார்.இதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2 வது பதக்கம் கிடைத்தது.2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார்.

பிவி ரமணா:

இந்நிலையில்,சிந்துவின் தந்தை பிவி ரமணா,”பேட்மிண்டன் சூப்பர் ஸ்டாரான சிந்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி இந்தியா திரும்பியவுடன் பிரதமரை சந்திப்பார்” என்று கூறினார்.

பிரதமருடன் ஐஸ்கிரீம்:

மேலும்,அவர் கூறுகையில்:”ஆகஸ்ட் 3 ஆம் தேதி சிந்து வருகிறார் என்று நினைக்கிறேன்.அதற்காக,நான் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளேன். ஒலிம்பிக்கில் நாட்டுக்காக எங்களால் முடிந்த அளவு பதக்கங்களை நாங்கள் பெற வேண்டும்.முன்னதாக பிரதமர் மோடி, நீங்கள் போங்கள், நீங்கள் திரும்பி வரும்போது நாம் ஐஸ்கிரீம் சாப்பிடுவோம் என்று சிந்துவிடம்  உற்சாகம் அளிக்கும் விதமாக கூறியிருந்தார்.இதனால்,பிவி சிந்து தற்போது நிச்சயமாக பிரதமருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவார், “என்று ரமணா கூறினார்.

ஐஸ்கிரீம் சாப்பிட தடை:

ஏனெனில்,2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான இந்திய அணியுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ இணைப்பு மூலம் உரையாடினார், பிவி சிந்துவும் அவர்களில் ஒருவராக இருந்தார்.இந்த அமர்வின் போது, பிரதமர் மோடி சிந்துவிடம் உணவு கட்டுப்பாடு பற்றி கேலியாக கேட்டார் மற்றும் இந்திய பேட்மிண்டன் அணியின் தலைமை தேசிய பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த் ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஐஸ்கிரீம் சாப்பிட தடை விதித்ததை நினைவு கூர்ந்தார்.

உணவுக் கட்டுப்பாடு:

அதற்கு பதிலளித்த சிந்து, “ஒலிம்பிக்கிற்கு முன்பு நான் என் உணவைக் கட்டுப்படுத்துகிறேன்,அதனால் நான் நிறைய ஐஸ்கிரீம் சாப்பிடவில்லை. எப்போதாவது மட்டுமே சாப்பிடுவேன்”, என்று தெரிவித்தார்.

பிரதமர் உறுதி:

இதனையடுத்து,பிரதமர் மோடி, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு அவருடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவதாக உறுதியளித்து கூறியதாவது: “கடினமாக உழைக்கவும், நீங்கள் மீண்டும் வெற்றி பெறுவீர்கள் என்று நான் நம்புகிறேன். மேலும் நீங்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் இருந்து திரும்பும்போது, நான் உங்களுடன் ஐஸ்கிரீம் சாப்பிடுவேன்,” என்று கூறினார்.

வாழ்த்து:

இதற்கிடையில்,வெண்கலம் வென்றதற்காக பிவி சிந்துவை வாழ்த்திய பிரதமர் மோடி,தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:”பிவி சிந்துவின் நட்சத்திர செயல்திறனால் நாம் அனைவரும் மகிழ்ச்சியடைகிறோம்.அவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு வாழ்த்துக்கள். அவர் இந்தியாவின் பெருமை மற்றும் நமது மிகச்சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர்”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்