தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது தெரியுமா…? முழு விபரம் இதோ…!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பாப்போம்.
1921-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, சென்னை மாகாணத்தில், தமிழக சட்டமன்றம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த சட்டமன்றம் தொடங்கி 100-வது ஆண்டை எட்டியுள்ள நிலையில், இன்று நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து இந்த நூற்றாண்டு விழாவில் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது. இன்று மாலை 5 மணி அளவில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெறும் இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் பல கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டுக்கு உழைத்த தலைவர்களை கௌரவிக்கும் வகையில், சட்டப்பேரவையில் உருவப்படங்களை வைக்கும் வழக்கம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தொடங்கியது. அந்த வகையில், தமிழக சட்டமன்றத்தில் இதுவரை எந்தெந்த தலைவர்களின் உருவப்படங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி பார்ப்போம்.
- 1948, ஜூலை 24-ம் தேதி மகாத்மா காந்தியின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 1948, ஆகஸ்ட் மாதம், ராஜாஜியின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 1964 மார்ச் 22-ம் தேதி திருவள்ளுவரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 1969, பிப்ரவரி 10-ம் தேதி அறிஞர் அண்ணா உருவப்படம் திறக்கப்பட்டது.
- 1977, ஆகஸ்ட் 18-ம் தேதி காமராஜரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 1980, ஆகஸ்ட் 9-ம் தேதி, தந்தை பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்க தேவர், காயிதே மில்லத், முகமது இஸ்மாயில் ஆகியோரின் படம் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டது.
- 1992, ஜனவரி 31-ம் தேதி எம்.ஜி.ஆரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 2018, பிப்ரவரி 11-ம் தேதி ஜெயலலிதா அவர்களின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 2020, ஜூலை 19-ம் தேதி ராமசாமி படையாட்சியாரின் உருவப்படம் திறக்கப்பட்டது.
- 2021, பிப்ரவரி 23-ம் தேதி வ.உ.சி, ஓமந்தூரார், சுப்பராயன் ஆகியோர் உருவப்படம் திறக்கப்பட்டது.
- இன்று (02.08.2021) கலைஞர் கருணாநிதியின் உருவப்படம் திறக்கப்படுகிறது.