ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸின் 3-வது அலை உருவாகும்…! அக்டொபரில் உச்சம் தொடும்…! ஆய்வில் வெளியான தகவல்…!

Default Image

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த வைரசை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் அடிப்படையில், தற்போது தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாத் மற்றும் கான்பூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி) யில் மதுக்குமல்லி வித்யாசாகர் மற்றும் மணீந்திரா அகர்வால் தலைமையில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் வெளியான ஆய்வறிக்கையின்படி ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை உருவாவதற்கான சாத்தியங்கள் உள்ளதாகவும்,  அக்டோபர் மாதத்தில் அது உச்சத்தை தொடும் என்றும் கூறப்படுகிறது.

கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைப் பார்க்கும்போது மூன்றாவது அலை உருவாகலாம் என்றும் இரண்டாவது அலையை போன்று, மூன்றாவது அலையில் பாதிப்பு இருக்காது  என்றும் கூறப்படுகின்றது. மேலும் இரண்டாவது அலையின் போது அதிகபட்சமாக 4 லட்சம் வரை மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த மூன்றாவது அலையில்  குறைந்தது ஒரு லட்சம் அல்லது அதிகபட்சமாக 1.50 லட்சம் வரை தொற்று பாதிப்பு மக்கள் ஆளாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்