ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள்-ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை உலக சாதனை..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியன் உலக சாதனை படைத்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.இப்போட்டிகளில்,அமெரிக்கா 20 தங்கம் உட்பட மொத்தம் 57 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.சீனா 23 தங்கம் உட்பட மொத்தம் 50 பதக்கங்களை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.
ஆனால்,இந்தியா இதுவரை ஒரு வெள்ளிப் பதக்கம் மட்டுமே பெற்றுள்ளது.இவ்வாறு ஒரு பதக்கத்தையாவது வெல்ல வேண்டும் என்பதே கனவாக இருக்கும் நிலையில்,ஆஸ்திரேலியாவின் நீச்சல் வீராங்கனையான எம்மா மெக்கியன்,தனி ஒரு ஆளாக டோக்கியோ ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகளில் ஏழு பதக்கங்களைக் குவித்துள்ளார்.இதன்மூலம்,ஒரே ஒலிம்பிக்கில் 7 பதக்கங்கள் பெற்ற இரண்டாவது பெண்மணி என்ற உலக சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக,1952 இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ரஷ்ய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மரியா கோரோகோவ்ஸ்கயா 7 பதக்கங்கள் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
அவர் பெற்ற ஏழு பதக்கங்களின் விவரங்கள் இதோ:-
- 50 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல், 4 * 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே என நான்கு போட்டிகளில் – தங்கப் பதக்கம்.
- 100 மீட்டர் பட்டர்ஃப்ளை, 4 * 200 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் ரிலே, கலப்பு 4 * 100 மீட்டர் மிட்லே ரிலே ஆகிய 3 போட்டிகளில் – வெண்கலம் உட்பட மொத்தம் 7 பதக்கங்களை வென்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தற்போது வரை ஆஸ்திரேலியா 14 தங்கம் பெற்று 4வது இடத்தில் உள்ளது.அதில் நான்கு தங்கத்தை எம்மா மெக்கியன் மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார்.
11 medals at Olympic level.
7 medals in Tokyo.
4 of them gold.She joins Ian Thorpe with five gold medals in her Olympic career.
???????? Emma McKeon, you are an inspiration. ????????#Tokyo2020 | #7Olympics | #Swimming pic.twitter.com/6u4KGzH6Lr
— 7Olympics (@7olympics) August 1, 2021
நான்காவது பெண்மணி
உலகிலேயே, ஒரே ஒலிம்பிக் போட்டியில் 50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டிகள் என இரண்டிலும் தங்கம் வென்ற நான்காவது பெண்மணி இவர்தான்.அதேபோல,ஆஸ்திரேலிய அணி 10 ஒலிம்பிக் பதக்கங்கள் அல்லது ஒரு விளையாட்டில் பதக்கங்களை அதிகமாக வென்றதில்லை.
சாதனை:
முன்னதாக,ஆஸ்திரேலியாவின் இயான் தார்ப் மற்றும் லீசல் ஜோன்ஸ் ஆகியோர் இதுவரை பெற்ற தலா 9 ஒலிம்பிக் பதக்க சாதனையை,தற்போது எம்மா முறியடித்திருக்கிறார்.காரணம்,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற நான்கு தங்கம் மற்றும் மூன்று வெண்கலப் பதக்கத்தோடு, கடந்த 2016 ஒலிம்பிக் போட்டியில் வென்ற ஒரு தங்கம், இரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை எம்மா வென்றுள்ளார்.
பிற போட்டிகளில் வெற்றிப் பயணம்:
2013 ஆம் ஆண்டில், ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 15 வது ஃபைனா உலக சாம்பியன்ஷிப்பில் 4 × 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.2015 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற 16 வது ஃபைனா உலக சாம்பியன்ஷிப்பில் 4 × 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ரிலேவில் 4 × 100 மீட்டர் மெட்லே ரிலேவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
2017 உலக நீச்சல் சாம்பியன்ஷிப்பில் மெக்கான் நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.அதுமட்டுமல்லாமல்,2014 ஆம் ஆண்டு கிளாஸ்கோ மற்றும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கோல்ட் கோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டுகளில் எட்டு தங்கம் உட்பட பன்னிரண்டு பதக்கங்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.