ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சார்பட்டா மாரியம்மா.!

Default Image

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஆர்யா எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார் என்று நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார். 

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது ” இந்த படத்தில் நடிக்க வாய்ப்பை அளித்த இயக்குநர் பா. ரஞ்சித் சாருக்கு என் அன்பான நன்றி. ஆர்யா சாருக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன், ஷுட்டிங் ஸ்பாட்டில் அவர் எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார்.
வெளியில் அவரை பற்றி நான் கேள்வி பட்டதிற்கு முற்றிலும் மாறாக இருந்தார்.

படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாகவும், சீரியஸாகவும் இருந்தார். ஏனென்றால் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றவரிடம் இருந்து விலகியே இருக்கும். அதற்காக தான் அப்படி இருந்தார் என்பதை பின்னர் தான் தெரிந்து கொண்டேன். இயக்குனர் ரஞ்சித் அவர்கள் கூட அவரை இயல்பாக இருக்கும்படி கேட்டார். ஆனால் அவருடைய கபிலன் கதாபாத்திரத்தை விட்டு சிறிதளவும் வெளியே செல்லாமல் தன்னை பார்த்துக் கொண்டார். அவரின் உழைப்பு பிரமிப்பானது” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்