ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு உலக தர சான்று..!

உலக தர மிக்க புலிகள் காப்பகங்களாக ஆனைமலை, முதுமலை புலிகள் காப்பகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் உலக தரமிக்க புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை கொண்ட ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களில் 50 புலிகள் காப்பகங்கள் இருக்கின்றது. கடந்த 2020 ஆம் இந்த ஆய்வை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொண்டது.
இதில் புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல், காடு, அவ்விடத்தின் காலநிலை மாற்றம், புலிகள் பாதுகாப்புக்கான மேலாண்மை மற்றும் காப்பகத்தின் பாதுகாப்பு பொதுமக்கள் ஈடுபாடு போன்றவை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கெடுப்புகள் படி இந்தியாவில் 28 புலிகள் காப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த 28 காப்பகங்களை மதிப்பிட்டு தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் இதில் 14 புலிகள் காப்பகங்களுக்கு பாதுகாப்பு தரநிலை அடிப்படையில் சான்று அளிக்கப்பட்டது. அதன்படி, கோவை மாவட்டம் ஆனைமலை மற்றும் நீலகிரி முதுமலை புலிகள் காப்பகங்களுக்கு உலக தரமிக்க சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் உள்ள ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உலக தரமிக்க அங்கீகார சான்றித கிடைத்துள்ளது. புலிகள் பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்தும் உலகத் தரமிக்க புலிகள் காப்பகமாக சான்று கிடைத்துள்ளது. சிறப்பான வன உயிரின பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் ஈடுபாடுள்ள காப்பகமாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025