ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாகும் நடிகை காயத்ரி.?
ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரி சங்கர் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள இடம் பொருள் ஏவல் மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் விரைவில் தியரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் இளையராஜா, யுவன் இணைந்து இசையமைத்துள்ள ‘மாமனிதன்’ திரைப்படம் முதலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படங்களை தொடர்ந்து இயக்குனர் சீனு ராமசாமி அடுத்ததாக நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷை வைத்து ஒரு புதிய திரைப்படம் இயக்கவுள்ளார். அதிரடி த்ரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைமகன் தயாரிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில், தற்போது சீனு ராமசாமி இயக்கும் இந்த படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷிற்கு ஜோடியாக நடிகை காயத்ரிசங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. காயத்ரி சங்கர் ஏற்கனவே இயக்குனர் சீனு ராம சாமி இயக்கத்தில் வெளியாகவுள்ள மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.