பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக இளம்பெண் மனு ..!
கேரளா இளம்பெண் தன்னை பலாத்காரம் செய்த பாதிரியாரை திருமணம் செய்ய விரும்புவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்.
கேரள மாநிலம் கண்ணூர் அருகே கொட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ராபின் வடக்கும்சேரி (40) அப்பகுதியில் உள்ள ஒரு சர்ச்சில் பாரதியார் ஆக இருந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு சர்ச்சில் பிரார்த்தனைக்கு வந்த ஒரு சிறுமியை பாதிரியார் ராபின் சர்ச்சில் வைத்து பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பிணியான பின்னர் அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்து. இந்த விவகாரம் குறித்து போலீசாருக்கு தெரிய வர போலீசார் நடத்திய விசாரணையில் பாதிரியார் ராபின்அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததும், பாதிரியாரின் மிரட்டலுக்கு பயந்து சிறுமியின் பெற்றோர் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் இருந்தது தெரியவந்தது.
பின்னர், போலீசார் பாதிரியார் ராபினை கைது செய்தனர். இந்த வழக்கு தலசேரி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிரியாருக்கு 60 ஆண்டுகள் தண்டனை விதித்தனர். இதை தொடர்ந்து பாதிரியார் கண்ணூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதிரியார் ராபின் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் சிறுமியின் சம்மதத்துடன் தான் பாலியல் உறவு வைத்துக்கொண்டேன். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கூறினார். அதை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு தற்போது 20 வயதாகிறது.
இந்நிலையில், அந்த இளம்பெண் சிறையில் உள்ள பாதிரியார் ராபினை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். நானும் எனது குழந்தையும் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறோம். இதனால், ராபினுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.