பெண்களை கருத்தரிக்க சொந்த விந்தணுவைப் பயன்படுத்திய மருத்துவர் – ரூ.80 கோடி இழப்பீடு தர ஒப்புதல்.!
பெண்களை கருத்தரிக்க சொந்த விந்தணுவைப் பயன்படுத்திய கனடா மருத்துவர் ரூ.80 கோடி இழப்பீடு தொகையாக வழங்க ஒப்புதல்.
கனடிய கருவுறுதல் மருத்துவர் 80 வயதான பெர்னார்ட் நார்மன் பார்வின் , IVF எனப்படும் சிகிச்சையின் போது பெண்களை கருத்தரிக்க தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தியதாக சுமார் 200க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுத்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.80 கோடி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
மருத்துவரால் பாதிக்கப்பட்டவர்கள் முன்மொழியப்பட்ட ($ 13.375m) ரூ.80 கோடியை பகிர்ந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால், முன்மொழியப்பட்ட இந்த தீர்வு இன்னும் ஒன்ராறியோ மேல் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. தி கார்டியன் அறிக்கையின்படி, பார்வின், தனது வெற்றி விகிதத்திற்காக “பேபி காட்” என்று அழைக்கப்படுகிறார்.
இந்த வழக்கில் சீரற்ற மாதிரிகளை வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஒன்ராறியோ நீதிமன்றம் (Ontario Superior Court) பார்வின் மீதான வர்க்க நடவடிக்கை வழக்கு சான்றளித்தது. இது கடந்த 2016ல் தொடங்கப்பட்ட வழக்காகும்.
1989ல் டேவினா மற்றும் டேவிட் டிக்சன் என்ற தம்பதியினர் கருத்தரிக்க பார்வின் உதவியை நாடியதாகவும், இதன்பின் அவர்களின் மகள் ரெபேக்கா அவர்களுடன் ஒற்றுமை இல்லாததால் சந்தேகமடைந்ததை அடுத்து, டிஎன்ஏ மாதிரிக்காக பெற்றோர், பார்வினை அணுகியபோது, அவர் மறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆண் நண்பர்களின் விந்தணுக்கள் பயன்படுத்தப்படும் என்று பார்வின் தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், சீரற்ற மாதிரிகளை பயன்படுத்தியதாகவும், சில நேரங்களில் தனது சொந்த விந்தணுக்களை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
கடந்த 2013ல் ஒன்ராறியோவின் மருத்துவர்கள் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கல்லூரியில் நான்கு பெண்களை தவறான விந்தணுக்களைப் பயன்படுத்தி கருத்தரிக்க ஒப்புக் கொண்டதோடு, பார்வின் நடத்தையை கண்டிக்கத்தக்கது என எச்சரித்து, 2014ல், மருத்துவ உரிமத்தை ரத்து செய்தனர்.
இந்த நிலையில், பாதிக்கப்ட்டவர்களுக்கு இழப்பீடு தொகையாக ரூ.80 கோடி தருவதாக பார்வின் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், முன்மொழியப்பட்ட தீர்வின் படி, முன்னாள் நோயாளிகள் மற்றும் குழந்தைகள் C $ 50,000 (சுமார் ரூ.29,80,632) வரை இழப்பீடு பெற தகுதியுடையவர்கள். ஒரு நீதிபதி தீர்வுக்கு ஒப்புதல் அளித்த பின்னரே பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.