தடுப்பூசி செலுத்திக் கொண்டால் ஊக்கத்தொகை வழங்கப்படும்…! அமெரிக்க அரசு அதிரடி…!

Default Image

அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலக நாடுகள் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் டெல்டா வகை வைரஸானது தீவிரமாக பரவி வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு தடுப்பூசி போடும் பணிகளை அமெரிக்க அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு 100 டாலர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பரிசோதனைகளை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு முன்னதாக, அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாசி கூறுகையில், அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு 80 சதவீதத்துக்கும் மேல், டெல்டா வகை வைரஸ் பரவலால் தன ஏற்படுவதாகவும், தடுப்பூசி காரணமாக அதிகமான நபர்கள் மருத்துவமனைகளில் வந்து அனுமதிக்கப்படுவது குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்காவில் சில இடங்களில் தடுப்பூசி செலுத்துவதில் வேகம் குறைந்துள்ளது. அதனை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today
lucky baskhar
bengal cyclone
FisherManRescue
Delhi Prashant Vihar PVR blast
Champions Trophy 2025 - PCB Head
AAP Leader Arvind Kejriwal