கொரோனா 3-வது அலை அதிக அளவிலான வைரஸை பரப்பும் – கே.விஜய ராகவன்

Default Image

கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக  பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி, தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரசின் மூன்றாவது அலை பரவக் கூடும் என்று மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜயராகவன்  அவர்கள் கூறுகையில், கொரோனா வைரசின் மூன்றாவது அலை தவிர்க்க முடியாது. இது அதிக அளவிலான வைரஸை பரப்பும் என்றும், மூன்றாவது அலை  எப்போது வரும் என்று தெரியாது, ஆனால் புதிய வைரஸ் பரவலை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தற்போதைய மாறுபாடுகளுக்கு இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா மட்டுமல்லாது உலகின் அனைத்து நாடுகளிலும் புதிய வகை கொரோனா வைரஸ் உருவாகும் என்றும், அதன் பரவும் தன்மை இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.  இந்திய மற்றும் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு ஏற்றவாறு செயலாற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்