வாய்ப்புண், குடல் புண்ணை குணமாக்கும் புடலங்காய்..!
தமிழகமெங்கும் தோட்டங்களில் பயிரிடப்படுகிறது, புடலங்காய். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சூட்டை குறைக்கும். நல்ல பசி உண்டாகும். வயிற்றுப் பொருமல் நீங்கும். வயிற்றுப் பூச்சியை நீக்கும். இதன் காய், வேர், இலை மருத்துவ குணமுடையவை என்றாலும், நாம் பயன்படுத்துவது காயை மட்டும்தான்.
பொதுவாக, புடலங்காயில் தண்ணீர் சத்து அதிகமாக உள்ளதால், சிறிதளவு சாப்பிட்டவுடன் வயிறு நிறையும்.
உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள், புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும். இதனால் உடலில் உள்ள, தேவையற்ற உப்பு நீரை, வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
இதய கோளாறு உள்ளவர்கள், புடலை இலையின் சாறு எடுத்து நாள்தோறும், 2 தேக்கரண்டி வீதம் வெறும் வயிற்றில், 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால், இதயநோய்கள் அனைத்தும் நீங்கும்.
புடலையின் வேரை கைப்பிடி எடுத்து, மையாக அரைத்து சில துளி அளவு வெந்நீரில் விட்டு குடித்து வந்தால், மலமிளகி வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும். புடலங்காயை பொரியல் செய்து சாப்பிட, நரம்புகளுக்கு புத்துணர்வு கிடைக்கும். நினைவாற்றல் அதிகரிக்கும். நீரிழிவு உள்ளவர்கள், புடலங்காயை எந்த வகையிலாவது சேர்த்துவர, அனைத்து வகையான சத்துகளும் அவர்களுக்கு கிடைக்கும்.
புழுவெட்டு உள்ளவர்கள், பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், புடலங்கொடியின் இலையை அரைத்து தலையில் தடவ, புழுவெட்டு மறையும். தொடர்ந்து காயை உணவாக சாப்பிட்டு வந்தால், பொடுகு நீங்கும்.
பெண்களுக்கு உண்டாகும், வெள்ளைப்படுதலை குணமாக்க, புடலங்காயை குழம்பு வைத்து சாப்பிட வேண்டும். இதனால் கருப்பை கோளாறுகள் நீங்கும். மிகவும் மெலிந்த உடல் கொண்டவர்கள், சூட்டு உடம்புக்காரர்கள் அடிக்கடி புடலங்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் உடல் பருமனடையும்.
குடல்புண் உள்ளவர்களுக்கு, அடிக்கடி வாயில் புண் ஏற்படும். இவர்கள் வாரம் ஒரு முறை, புடலங்காயை எந்த வகையிலாவது உணவில் சேர்த்து வந்தால், வாய்ப்புண், குடல் புண், தொண்டைப் புண் ஆறும். உணவு செரிக்காமல் இருப்பவர்கள், புடலங்காயை கூட்டு செய்து சாப்பிட்டால், எளிதில் ஜீரணமாகும். இத்தகைய சிறப்பு கொண்ட புடலையை, அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அப்படி
சாப்பிட்டால் சொறிசிரங்கு, கரப்பான் நோய்கள் ஏற்படும். உணவுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த புடலங்காயை ஆராய்ந்து, அதன் மருத்துவ குணங்களை அளித்தனர் நமது முன்னோர்கள். உணவே மருந்து என்ற முறையில், அளவறிந்து தேவைக்கு ஏற்ப அதை பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.