சென்னையில் கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

சென்னையில் கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைவாணர் அரங்கில் நடந்துவரும் கொரோனா பெருந்தொற்றை தவிர்க்கும் நோக்கில் தமிழ்நாடு அரசின் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரசார விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், தமிழக அரசின் கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, கொரோனா 2-வது அலையின்போனு அரசின் நடவடிக்கைகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டார். மேலும், கலைவாணர் அரங்கில் கொரோனா விழிப்புணர்வு குறும்படத்தையும் வெளியிட்டார்.