ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் பிறந்த தினம்…!
ஹாரிபாட்டர் கதையின் நாவலாசிரியர் ஜே.கே.ரௌலிங் பிறந்த தினம்.
ஹாரிபாட்டர் என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இந்த ஹாரிபாட்டர் மூலம் உலகின் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் ஜே. கே. ரௌலிங். இவர் பிரபலமான ஒரு ஆங்கில புதின எழுத்தாளர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆவார். இவர் 31-ம் தேதி, 1965-ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் பீட்டர் ஜேம்ஸ் ரவுலிங், தயார் அனி ரவுலிங் ஆவார்.
ரௌலிங் புனித மைக்கேல் ஆரம்பப்பள்ளியில் பயின்றார். சிறு வயதில் ரவுலிங் அடிக்கடி கற்பனைக் கதைகள் எழுதுவார். அவற்றை அடிக்கடி தன் தங்கையிடம் வாசித்துக் காண்பிக்கும் பழக்கம் உண்டு.
இந்நிலையில், 1990ம் ஆண்டில் ஒருமுறை இவர் மான்செஸ்டரிலிருந்து லண்டன் செல்ல இருந்தபோது அவரது ரயில் தாமதமாக வந்தது. அப்போது மக்கள் மிகுந்த ரயிலில் லண்டனை நோக்கி இவர் பயணித்துக் கொண்டிருந்த போதுதான் ஹாரிபாட்டர் கதைக்கான எண்ணம் இவருடைய மனதில் உதித்தது. அப்போது சுழன்ற இவரது கற்பனையில் பிறந்தவன்தான் மந்திரவாதிகளின் பள்ளிக்குச் செல்லும் ஹாரிபாட்டர்.
1995-ல் ‘ஹாரிபாட்டர் அன்ட் தி ஃபிலாசஃபர்ஸ் ஸ்டோன்’ என்ற தனது முதல் நாவலை எழுதி முடித்தார். அதை தொடர்ந்து, ‘ஹாரிபாட்டர் அன்ட் சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ்’, ‘ஹாரிபாட்டர் அன்ட் தி பிரிசினர் ஆஃப் அஸ்கபன்’ அடுத்தடுத்து வெளிவந்தன.
உலகம் முழுவதும் 65 மொழிகளில், இவரது 7 படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பிரிட்டிஷ் சில்ரன் புக் விருது, 3 முறை ஸ்மார்டீஸ் பரிசு, ஒயிட்பிரெட் சில்ரன்ஸ் புக் ஆஃப் தி இயர் விருது என பல விருதுகள் பெற்றுள்ளார். இந்நிலையில், இன்று இவர் தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.