மங்கல்ய,சர்ப்ப தோஷத்தை போக்கும் ஸ்ரீ வாசவி..!! வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஜெயந்தி இன்று..!!

Default Image

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை தசமியை வாசவி ஜெயந்தியாக மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர் தை அமாவாசைக்கு அடுத்து வரும் இரண்டாவது நாள் சுக்ல துவிதியை அன்று அக்னி குண்டத்தில் இறங்கியதால் அன்றைய தினத்தை அக்னி பிரவேச தினமாக அரிய வைசியர்கள் கொண்டாடுகின்றனர்.வாசவி தேவியை வணங்கி வந்தால், சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகலும்.

ஒருமுறை கயிலாயத்தில்சிவபெருமானுக்கும்,பார்வதிக்கும் காவலாக நந்தியம் பெருமாள் நின்று கொண்டிருந்தார் அப்பொழுது அம்மை அப்பனை தினமும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார் சமாதி மகரிஷி வணங்க வந்த அவரை நந்தி சிறிது நேரம் காவலுக்கு நிற்கும் படி கேட்டதற்கு இணங்க காவல் காத்தார் மகரிஷிஇந்த வேளையில் அம்மை அப்பனை தரிசிக்க துர்வாச மகரிஷி அங்கு வருகைதந்தார். ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க சமாதி மகரிஷி மறுத்து விடவே இதனால் கோபமுற்ற துர்வாசர் நீ பூலோகத்தில் மானிடனாக பிறப்பாய் என சாபமிட்டார்.

இதனிடையில் குளித்து விட்டு வந்த நந்தி பெருமான் அன்று இறைவனை மட்டும் வணங்கினார் இதனால் கோபமுற்ற தேவி பார்வதி நந்தி நீ பூலோகத்தில் மானிடனாக பிறப்பாய் என சாபமிட்டார்,பதிலுக்கு நந்தி தேவரும் பார்வதி தேவியே மானிடப்பெண்ணாக பூலோகத்தில் பிறந்து வளர்ந்து கன்னியாக அக்னியில் இறங்கி இறைவனை அடைவீர்கள் என சாபம் அளித்தார்.

பூலோகத்தில் அரிய வைசிய குலத்தை சேர்ந்த விருபாட்சன் வாசம்பா என்ற தம்பதியர்க்கு நெடுகாலமாக குழந்தை இல்லாமல் இருந்து வந்தது இதனால் இறைவனிடம் தங்களின் குறையை கூறி வழிபட்டனர்.இறைவனை இடைவிடாமல் வழிபட்டதன் விளைவாக குசுமாம்பிகா என்ற பெயரில் பார்வதி தேவியிம்,சிரேஷ்டி என்ற பெயரில் சமாதி மகரிஷியும் இவர்களுக்கு குழந்தையாக பிறந்தனர் நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமாக குசுமாம்பிகா அழகும் ,அறிவும் கொண்ட கன்னியாக வளர்ந்து வந்தாள் தேவிபார்வதி குசுமாம்பிகா அழகை கண்டு அவளை மணமுடிக்க விரும்பினான்.

விஷ்ணுவர்த்தன் என்னும் மன்னன் தனது விருப்பத்தை வாசவி என்ற சுமாம்பிகாவின் பெற்றோரிடம் தெரிவிக்கவே தன் குலத் தர்மபடி அவளை மணமுடித்து தர இயலாது என்றும் ,தன் குலத்தவர்களிடம் அலோசித்து முடிவை சொல்வதாகவும் கூறிவிட்டார்.

ஊரில் அமைந்துள்ள ஆலயத்தில் வைசிய குலத்தவர்கள் 714 பேர் ஒன்று கூடினார் அதில் மன்னனுக்கு சாதகமாக 612 பேர் ஒப்புக்கொண்டனர்.மீதம் 102 பேர் எதிர்ப்பு தெரிவித்து அவர்களுக்குள் சண்டை வரும் சூழ்நிலை உண்டானது இதயெல்லாம் கவனித்து கொண்டிருந்த வாசவி தன்னால் தான் இத்தனை பிரச்சனை இனி இவ்வுலகத்தில் நான் வாழக் கூடாது என்று கூறி அக்னி வளர்த்து அதில் குதித்தாள்,தன் உயிரையும் மாய்த்துக் கொண்டாள்

தங்களால் தான் இந்த தவறு என்று எண்ணி 102 வைசிய கோத்தரக்காரர்களும் அதே அக்னியில் குதித்தனர் இவ்வனைத்திற்கும் முதல் காரணமாக இருந்தவன் நான் தான் என்று விஷ்ணுவர்த்தனும் உயிர்விட்டான்.

தான் அக்னியில் குதித்தது சாபத்தினால் ஆனால் ஒன்றுமே அறியாத இவர்கள் என் மீது உள்ள அன்பினால் குதித்தவர்கள் என்று அருளிய தேவி தன் சுயவடிவத்தில் ஆரியகுல வைசியர்களுக்கு காட்சி தந்து அருளினார்.‘இன்று முதல் நீங்கள்102கோத்திரக்காரர்கள் பொன், பொருள், கல்வி, புகழ் உள்ளிட்ட சகல சம்பத்துக்களையும் பெற்று குறைவின்றி வாழ்வீர்கள். நான் உங்கள் குல தெய்வமாக இருந்து உங்கள் சந்ததியினரையும், என்னை வழிபடும் பிற மத, இனத்தவரையும் காத்தருள்வேன்’ என்று வரமளித்து மறைந்தாள்.

இதனைக் கண்ட ஆரிய வைசியர்கள் ‘ஓம் வாசவி பார்வதி தாயே நமஹ’ எனக் கூறி வணங்கி நின்றனர். அன்று முதல் ஆரிய வைசிய மக்கள் பார்வதி தேவியை தங்களின் குலதெய்வமாக வாசவி என்கிற கன்னியா பரமேசியரி என்ற பெயரில் வழிபடுகின்றனர்.ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஆந்திர மாநிலத்தில்,மேற்கு கோதவாரி ஜில்லாவில் பெணுகுண்டாவில் உள்ளது இக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் போல் உள்ள தூண்களில் அம்பாலுடன் ஐக்கியமான் 102 வைசியர்களின் வரலாறு அற்புதமாக செதுக்கப்பட்டது.

நாகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகப்புற்றுக்கு பால் வார்த்து, 9 நெய் தீபம் ஏற்றி மூன்று வாரங்கள் தொடர்ந்து வணங்கி வந்தால், சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகலும். வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன.

எனவே இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சரக கிரக தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம்.இந்த தினத்திமாகிய வாசவி ஜெயந்தியன்று பெண்கள் சனி பகவானையும் வணங்கலாம்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்