வண்டி ஓட்டுனரால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்…!

Default Image

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் வண்டி ஓட்டுனரால் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று இரவு டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்துள்ள புகாரில் டெல்லியில் உள்ள எம்ஜி சாலையில் உள்ள ஒரு கடையில் தான் பணிபுரிந்து வருவதாகவும், நேற்று 08:16 மணி அளவில் சாலையில் போக்குவரத்துக்காக காத்திருந்ததாகவும், அப்பொழுது டெல்லியில் உள்ள அய நகருக்கு பயணிகளை அழைத்துச் செல்வதற்காக நின்ற ஒரு காரில் அவர் ஏறியதாக கூறியுள்ளார்.

மேலும் ஏற்கனவே அந்த காரில் பயணிகள் நிறைய பேர் இருந்ததால் தன்னை ஓட்டுநரின் அருகில் உள்ள சீட்டில் அமர சொல்லி ஓட்டுநர் கூறியதால் அங்கு  அமர்ந்தேன். அதன் பின் ஓட்டுநர் பயணிகளை இறக்கிவிட்டு தன்னை ஒரு நீண்ட தூரம் கூட்டி சென்று, காருக்குள் வைத்தே பலாத்காரம் செய்ததாகவும். பின் அய நகரின் எல்லையிலேயே தன்னை விட்டு விட்டு தப்பி ஓடியதாகவும் அந்த பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்