இந்தியா-இலங்கை 3ஆவது டி20 போட்டியில் ரன் எடுக்காமல் வெளியேறிய ஷிகர் தவான், சாம்சன்..!
இந்தியா-இலங்கை இடையேயான 3 ஆவது டி20 போட்டியில் ரன் எடுக்காமல் ஷிகர் தவான், சஞ்சு சாம்சன் வெளியேறியுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இந்திய அணி 2 -1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று கடைசி மற்றும் 3-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டி கொழும்புவில் உள்ள ஆர்.பிரமதாச மைதானத்தில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் தவான் முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில் கேப்டன் ஷிகர் தவான் மற்றும் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளனர். ஷிகர் தவான் முதல் பந்திலும், சஞ்சு சாம்சன் 3 ஆவது பந்திலும் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் 11 ஓவர் முடிவடைந்துள்ளது.