டெல்லி: வார இறுதியில் கனமழைக்கு வாய்ப்பு..!ஐ.எம்.டி அறிவிப்பு..!

டெல்லியில் வார இறுதி நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லியில் வரும் வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது வார இறுதி நாட்களில் தீவிர மழையாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான மழை அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்கைமேட் வெதர் என்ற தனியார் வானிலை அறிவிப்பின் துணைத்தலைவர் மகேஷ் பலவட் கூறுகையில், டெல்லியில் வழக்கத்தை விட தாமதமாக தொடங்கினாலும் ஜூலை மாத மழை அதிகமாக உள்ளது. இதனால் ஏற்கனவே டெல்லியில் 200% மழை பெய்துள்ளது.
மாதம் முடிவடையும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்த பகுதி உருவாகியிருப்பதாகவும் இதனால் டெல்லியின் அண்டை மாநிலங்களில் வரும் நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025