#Breaking:அகில இந்திய மருத்துவ இடங்கள் – ஓபிசிக்கு இட ஒதுக்கீடு..!
அகில இந்திய மருத்துவ இடங்களில்,ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில்,இதர பிறப்டுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு நடப்பு ஆண்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி,மாநில அரசுகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிகளில் ஆல் இந்தியா கோட்டா என்ற பிரிவில் ஓபிசிக்கு 27 % ,பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும்,நடப்பு ஆண்டிலேயே இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என தெரிகிறது.இதனால்,4000 க்கும் மேற்பட்ட ஓபிசி பிரிவு மாணவர்கள் பலனடைவார்கள்.
Ministry has taken a decision for providing 27% reservation for OBCs & 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for UG and PG medical/dental courses (MBBS/MD/MS/Diploma/BDS/MDS) from the current academic year 2021-22 onwards: Health Ministry pic.twitter.com/5BTzXg8Z2b
— ANI (@ANI) July 29, 2021