பெங்களூரில் முன்னாள் எம்எல்ஏ கடத்தல் வழக்கில் ஈடுபட்ட 2 பேரை பிடிக்க போலீசார் துப்பாக்கிசூடு!

Default Image

முன்னாள் கர்நாடக எம்.எல்.ஏ வர்தூர் பிரகாஷைக் கடத்திய வழக்கில் 2 பேரை கைது செய்ய பெங்களூரு போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பெங்களூரு காவல்துறையினர் நேற்று 2 குற்றவாளிகளை பிடிப்பதற்கு துப்பாக்கிச் சூடு நடத்தினர். முன்னாள் கர்நாடக எம்.எல்.ஏ வர்தூர் பிரகாஷ் கடத்தல் வழக்கிலும், ஒரு தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், அந்த இரண்டு குற்றவாளிகள் தேடப்பட்டதாக காவல்துறை தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கவிராஜ் மற்றும் அவரது கூட்டாளியான அமரேஷ் என அடையாளம் காணப்பட்டதாகவும், பெங்களூர் பைப்னஹள்ளியில் உள்ள தங்கள் மறைவிடத்திலிருந்து தப்பி ஓட முயன்றபோது முழங்காலில் சுட்டுள்ளனர்.

இவர்களை கைது செய்யச் சென்ற தேடல் குழு உறுப்பினர்களை இந்த இரண்டு குற்றவாளிகளும் தாக்கி தப்பி ஓட முயன்றதால் அவர்கள் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இந்திராநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் குமார், அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அந்த 2 குற்றவாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலார் அருகே இருந்து கடத்தப்பட்ட முன்னாள் கர்நாடக எம்.எல்.ஏ வர்தூர் பிரகாஷை கடத்திச் சென்றதில் காவிராஜ் தலைமையிலான அதே கும்பலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்று ஜூலை 5 ம் தேதி, கவிராஜ் கும்பலின் உறுப்பினர்கள் தொழிலதிபர் விஜயகுமாரை ரூ.48 லட்சம் பணத்திற்காக கொலை செய்ததாகவும் கூறினார். இதனிடையே, காவல்துறையினர் 2020 டிசம்பரில் குற்றவாளி காவிராஜை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால், ஜாமீனில் வெளியே வந்த பின்னர், அவரது கும்பல் மீண்டும் கடத்தல், கொலை போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதால், தற்போது குற்றவாளிகளை பிடிப்பதற்கு காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்