டாக்டர் திரைப்படத்தின் புதிய அப்டேட்…!! தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு.!
இன்னும் சில நாட்களில் டாக்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும் என்று கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி டாக்டர் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. சில படங்களும் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அதைபோல் டாக்டர் திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில், இன்னும் சில நாட்களில் டாக்டர் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகும்” என்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர்.
As you’re getting your vaccination shots done. Get ready for your laughter shot! #DoctorUpdate coming up in a few days… *slow dance begins*#Doctor
— KJR Studios (@kjr_studios) July 28, 2021