நீலகிரியில் பழமையான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடல்!

Default Image

50 ஆண்டுகள்  நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 1967ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகள் இயங்கிவந்த இந்த தொழிற்சாலை வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் நாளடைவில் நலிந்து வர தொடங்கியது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் உற்பத்தியும் நின்றுபோன நிலையில், அங்கு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்பட்டது. அவர்களில் 165 பேர் மட்டும் விருப்ப ஓய்வு வாங்க மறுத்தும் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க கோரியும் தொழிற்சாலைக்கு சென்று வந்தனர். பின்னர் உச்ச நீதிமன்றம் மூலம் அவர்களுக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தொழிற்சாலை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு செவ்வாய்கிழமை மாலை நிரந்தரமாக மூடப்பட்டது. தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஒரே ஃபிலிம் தொழிற்சாலையான ஹிந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் மூடப்பட்டது நீலகிரி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல ஏக்கர் பரப்பளவில் பல அடுக்குமாடி கட்டிடங்கள் இருந்தும் எந்த பயனும் இல்லாமல் இதன் கட்டிடங்கள் பாழடைந்து போவதற்குள் நெடு நாள் கோரிக்கையான மருத்துவக்கல்லூரி இந்த இடத்தில் வர மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நீலகிரி மக்களின் ஏதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்