தனிமைப்படுத்தப்பட்ட 8 இந்திய வீரர்கள்.., புதியதாக 5 வீரர்கள் அணியில் சேர்ப்பு..!
இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,நேற்று நடைபெற இருந்த 2-வது டி20 போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையில் உள்ள இந்திய அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், அகில இந்திய மூத்த தேர்வுக் குழு 2-வது மற்றும் 3-வது டி 20 போட்டிகளுக்கான இந்திய அணி புதிய வீரர்களின் பெயர் வெளிப்பட்டுள்ளது.
அதில், இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகிய 5 வலை பந்துவீச்சாளர்கள் மீதமுள்ள டி20 போட்டிகளுக்கான அணியில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 27 ஆம் தேதி க்ருனல் பாண்டியாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட பின்னர், அணியின் அனைத்து வீரர்களுக்கும், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எட்டு உட்பட உட்பட அனைவருக்கும் சோதனை முடிவுகள் நெகடிவ் என வந்ததுள்ளது. இருப்பினும், உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக க்ருனல் பாண்டியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேர் ஹோட்டலில் தொடர்ந்து தனிமையில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
???? NEWS ????: Additions to #TeamIndia squad in Sri Lanka for last two T20Is. #SLvIND
More Details ????
— BCCI (@BCCI) July 28, 2021