புதிய கல்வி கொள்கை குறித்து நாளை பிரதமர் மோடி உரை…!
தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
தேசிய கல்வி கொள்கை கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவு பெறும் நிலையில், மாணவர்களுடன் இந்த புதிய கல்வி கொள்கை குறித்து பிரதமர் மோடி காணொலி வாயிலாக நாளை மாலை 4.30 மணியளவில் உரையாட உள்ளார்.இந்த உரையாடலில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
மேலும், இந்த நிகழ்வின் போது கல்வித்துறையின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட வாய்ப்புள்ளது எனவும் கூறப்படுகிறது. இது குறித்து மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
On 29th July, on the completion of 1 year of reforms under the NEP, Hon. PM @narendramodi will launch multiple initiatives to help realise goals of #NEP2020 and address policy makers, teachers & students. ????https://t.co/RitN5vKSFB.
Do watch at 4:30 PM https://t.co/MjMwcEcoAf
— Dharmendra Pradhan (@dpradhanbjp) July 28, 2021