IPL 2018:மோசமான கேப்டன்சிப்பால் பதவியை உதறி தள்ளிய ஐபிஎல் கேப்டன்கள்!இந்த ஐபிஎல்லில் சொதப்பும் கேப்டன் யார் ?

Default Image

 சரியாக ஆடாத கேப்டன்கள்  ஐபிஎல் கிரிக்கெட்டில் அணியின் நலனுக்காக தன் கேப்டன் பதவியையே துறந்து பிறருக்கு வழிவிட்ட சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.

ந்டப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் சோபிக்கவில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாபுக்கு எதிராக அரைசதம் எடுத்த கம்பீர் அதன் பிறகு 15, 8, 3, 4 என்று சொதப்பி வருகிறார், அணியும் எந்த இலக்காக இருந்தாலும் தோற்று வருகிறது.

அணியில் இளம் கேப்டன்கள் ரிஷப் பந்த், பிரிதிவி ஷா உள்ளனர், முயற்சி செய்து பார்க்கலாம், இல்லையேல், அனுபவசாலியான கிளென் மேக்ஸ்வெலிடம் கொடுத்துப் பார்க்கலாம், இல்லையெனில் பார்மில் உள்ள ஷ்ரேயஸ் ஐயருக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம்.

இதற்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியிலேயே கேப்டன் பதவியைத் துறந்து வேறொருவரிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்த சந்தர்ப்பங்கள் உள்ளன.

Related image

நியூஸிலாந்து முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி டெல்லி டேர் டெவில்ஸிலிருந்து ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 2011 ஐபிஎல் தொடரில் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டார். இதே அணியில் கெய்ல், டிவில்லியர்ஸ், திலகரத்னே தில்ஷான் போன்றவர்களும் இருந்தனர்.

அப்போது டேனியல் வெட்டோரி சரிவர ஆடவில்லை இதனையடுத்து தன்னையே உட்காரவைத்து விராட் கோலியிடம் கேப்டன்சி பொறுப்பை ஒப்படைத்தார். அதன் பிறகு ஆர்சிபி 3 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றது.

Image result for SHIKHAR DHAWAN SRH

2013 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் அணியை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றியதில் ஷிகர் தவண் பங்கு அதிகம். இதனையடுத்து அடுத்த ஐபிஎல் தொடரில் ஷிகர் தவணிடம் கேப்டன்சி அளிக்கப்பட்டது.

ஆனால் கேப்டன்சி இவரது பேட்டிங் திறனில் பின்னடைவை ஏற்படுத்த கேப்டன்சி வேண்டாம் என்று ஷிகர் தவண் முடிவு செய்ய டேரன் சமியிடம் கேப்டன்சி ஒப்படைக்கப்பட்டது.

Image result for mumbai indians RICKY PONTING

2013 ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்ட பாண்டிங் மேல் விழுந்தது. ஆனால் 6 இன்னிங்ஸ்களில் 52 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். அப்போது தன் கேப்டன்சியை உதறி ரோஹித் சர்மாவிடம் கேப்டன்சியை அளிக்க வழிவகை செய்தார். இது மும்பை இந்தியன்ஸ் தலைவிதியையே மாற்றியது.

Image result for deccan chargers KUMAR CHANKARAKARA BATTING

2012 ஐபிஎல் தொடர், இதில் டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் குமார் சங்கக்காரா. இவர் கேப்டனாகவும், பேட்ஸ்மெனாகவும் சோபிக்கவில்லை. அதனால் தன்னை கேப்டன் பதவியிலிருந்து விலக்கிக் கொண்டார். அப்போது பார்மில் இருந்த ஆஸி.வீரர் கேமரூன் ஒயிட்டிடம் கேப்டன்சியை கொடுத்தார் சங்கக்காரா. ஆனால் இந்த நகர்த்தலும் கை கொடுக்கவில்லை.

எனவே இவ்வாறு நடந்துள்ளதால் கவுதம் கம்பீரும் இது போன்று ஓரிரு போட்டிகளுக்காவது செய்து பிறகு வெற்றி வழிக்குத் திரும்பியவுடன் அவர் கேப்டன்சியை எடுத்துக் கொள்ளலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்