டோக்கியோ 2020:குத்துச்சண்டையில் இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி – பதக்கம் வெல்ல வாய்ப்பு..!

Default Image

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் 75 கிலோ பிரிவில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை வீழ்த்தி இந்திய வீராங்கனை பூஜா ராணி வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளிர் 69-75 கிலோ எடை கொண்ட மிடில்வெயிட் குத்துச்சண்டை  போட்டியின் 16 வது சுற்றில் அல்ஜீரியாவின் இக்ராக் சாய்பை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி,இந்திய வீராங்கனை பூஜா ராணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன்மூலம்,ஆசிய சாம்பியனும், ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற முதல் இந்திய தடகள வீரருமான பூஜா ராணி,இந்தியாவுக்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்வதை நோக்கி ஒரு படி மேலே சென்றுள்ளார்.

பூஜா ராணி: 

முன்னதாக,2014 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 75 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.2016 இல் தெற்கு ஆசிய போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.அவர் மே 2016 இல் நடந்த பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் இரண்டாவது சுற்றில் தோற்றபோது ரியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறத் தவறிவிட்டார்.

இருப்பினும், ஆசிய-ஓசியானியா ஒலி தகுதிச் சுற்றில் பெண்கள் 75 கிலோ எடை கொண்ட காலிறுதியில் போர்னிபா சுட்டீயை 5-0 என்ற கோல் கணக்கில் வென்றதன் மூலம் 2020 ஒலிம்பிக்கிற்கும் தகுதிபெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்