அண்ணாத்த படத்திற்காக குரல் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார்.!

Default Image

அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்து வருகிறார். படத்தில் குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, ஜெகபதி பாபு, சூரி, சதிஷ், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வருகின்ற நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து அண்ணாத்த திரைப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் ரஜினிகாந்த் மைலாப்பூரில் உள்ள டப்பிங் ஸ்டுடியோவில் தொடங்கியுள்ளார். தினமும் அதிகாலை கொஞ்சம் கொஞ்சமா டப்பிங் பணியை முடித்து கொண்டு வருகிறார். விரைவில் டப்பிங் பணிகள் நிறைவடைந்து படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்