இந்தியா கிராமங்கள் முன்னேற்றமடையும் போதுதான் வளர்ச்சி அடையும்!பிரதமர் நரேந்திரமோடி

Default Image

பிரதமர் நரேந்திரமோடி, கிராமங்கள் முன்னேற்றமடையும் போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும் என்று  தெரிவித்துள்ளார்.

தேசிய பஞ்சாயத்து ராஜ்ஜிய தினத்தை முன்னிட்டு மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்லா மாவட்டம் ராம்நகரில் ராஷ்டிரிய கிராம ஸ்வராஜ் அபியான் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். கிராமப்புற  உள்ளாட்சி அமைப்புகளை தன்நிறைவு அடைய செய்வதுடன், நிதி ஆதாரத்திலும் வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  மின்சார வசதி, தடுப்பூசி போடுதல் போன்றவற்றில் 100 சதவீதம் பங்களிப்பு அளித்த கிராமங்களின் ஊராட்சிமன்ற தலைவர்களையும் மோடி கவுரவித்தார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, பஞ்சாயத்து உறுப்பினர் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து இந்திய கிராமங்களில் உயர்தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யவும், கிராமங்களில் வளர்ச்சியை மேம்படுத்தவும், அரசு உறுதி பூண்டுள்ளது என்று தெரிவித்தார். எந்த திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டாலும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், அதனை முழுமையாக பயன்படுத்துவதற்கு உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்