சிம்புவுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை.!
நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற திரைப்படங்களில் நடிக்கவுள்ளார். இதில் நதிகளிலே நீராடும் சூரியன் திரைப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார். இந்த படத்தினை வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகையான கீர்த்தி சனோன் நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கீர்த்தி சனோன் தில்வாலே, பரேலி கி பர்ஃபி, லூகா சுப்பி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.