இந்திய பார் கவுன்சில் மத்திய அரசு மீது கடும் அதிருப்தி!போக்ஸோ’ சட்டத்தில் அவசர கதியில் அரசு திருத்தம்!
இந்திய பார் கவுன்சில்,சிறுமியருக்கு எதிரான பாலியல் பலாத்காரம் தொடர்பாக, POCSO சட்டத்தில் அவசர கதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்திய பார் கவுன்சில் தலைவர் Manan Mishra கூறுகையில் விரிவாக விவாதிக்காமல், அவசர கோலத்தில் POCSO சட்டத்தில் திருத்தத்தை அரசு கொண்டு வந்துள்ளது என்றார். இதில் உள்ள நன்மை தீமைகளை ஆராய்ந்து அதன் பிறகு, திருத்தத்தை மேற்கொண்டிருக்க வேண்டுமென்று, பார் கவுன்சில் தலைவர் Manan Mishra கூறினார். சிறுமியருக்கு எதிரான பலாத்கார சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்தால் மரண தண்டனை என்று POCSO சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டு வந்திருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.