தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலாகிவிட்டார் – லண்டன் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

Default Image

இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானதாக அறிவித்து லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) தலைமையிலான இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொடந்த வழக்கு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மல்லையாவின் செயல்படாத கிங்பிஷர் ஏர்லைன்ஸுக்கு வழங்கப்பட்ட கடனை திரும்ப மீட்டெடுப்பது எளிதாகியுள்ளது.

லண்டன் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மல்லையாவின் சொத்துக்கள் பறிமுதல் செய்வதற்கு வழிவகுக்கிறது. ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதாக மல்லையா கூறிய நிலையில், அதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டது.

கடந்த மே மாதம் காணொளி வாயிலாக நடத்தப்பட்ட விசாரணையில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட திவால் மனுவை உயர் நீதிமன்ற உறுதி செய்தது. இது மனுவானது 2018-ல் தாக்கல் செய்யப்பட்டதாகும். இந்தியாவில் விஜய் மல்லையா கடன் பெறுவதற்கு ஈடாக சொத்துகள் வைத்துள்ளதாகக் கூறி நீதிமன்றம் நிறுத்தி வைத்திருந்தது.

தவிர்க்க முடியாத சூழலில் 65 வயதாகும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டதாக வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது. விஜய் மல்லையா இங்கிலாந்தில் ஜாமீனில் இருக்கிறார். ஆனால், வெளிநாட்டு தொடர்பான நடைமுறைகளில் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது. அதே நேரத்தில் மல்லையா இங்கிலாந்து அரசிடம் ரகசியமாக தஞ்சம் கோரியிருந்ததும் சட்டரீதியில் பிரச்சினையாக இருந்தது என்பதும் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா, ஜேஎம் பைனான்சியல் அசெட் ரிகன்ஸ்ட்ரக் ஷன் உள்ளிட்ட 13 நிதி நிறுவனங்கள் ஒருங்கிணைந்து விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கை நடத்தி வருகின்றன.

கடன் சர்ச்சைக்குரியதாக இருப்பதாகவும், இந்தியாவில் நடந்து வரும் நடவடிக்கைகள் இங்கிலாந்தில் திவால்நிலை உத்தரவைத் தடுப்பதாகவும் மல்லையாவின் சட்டக் குழு நீதிமன்றத்தில் வாதிட்டது. கடந்த 2013-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி முதல் வழங்கப்பட்ட கடனுக்கு 11.5% வட்டி விகிதம் கணக்கிடப்பட்டு, கூட்டு வட்டியும் சேர்த்து வசூலிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்