உள்ளாட்சித் தேர்தல் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அவசர ஆலோசனை கூட்டம்!

உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அவரச ஆலோசனை கூட்டம்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த அவசர ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
இதனிடையே, தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மேலும், டிசம்பருக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தமிழகம் முழுவதும் நடத்தி முடிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.