திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு நேரில் சென்று முதல்வர் வாழ்த்து..!
திரிபுராவில் 105 வயது மூதாட்டி கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கு அம்மாநில முதல்வர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரிபுரா மாநிலம் பிரம்மஹிரா என்ற பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாரா கன்யா தெப்பமா. இவருக்கு 105 வயது ஆகிறது. இந்நிலையில் இவர் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டுள்ளார்.
பலரும் கொரோனா தடுப்பூசி குறித்த வதந்தியால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அஞ்சி வரும் நிலையில், எவ்வித அச்சமும் இல்லாமல் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கே சென்று தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார் தெப்பமா. இதனை அறிந்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் எந்தவொரு அறிவிப்பும் செய்யாமல் நேரடியாக தெப்பமாவை காண சென்றுள்ளார்.
மூதாட்டியை நேரில் பார்த்து வாழ்த்திய முதல்வர், இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,
“தெப்பமாவிடம் பிரதமர் மோடியின் புகைப்படத்தை காண்பித்தபோது அவரை இவர் அடையாளம் கண்டுகொண்டார். 105 வயதான மூதாட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் போது, உங்கள் அனைவரையும் எது தடுக்கிறது. அனைவரும் சென்று தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
Met Tarakanya Debbarma of Brahmacherra VC.
Who’s 105-year-old, turned up at a vaccination center to take the vaccine against Corona Virus.
She recognised PM Modi at once when I showed her his pic.
If she can take vaccine, what’s stopping you all from doing!
Go, get the jab! pic.twitter.com/YwNSPD8TDA— Biplab Kumar Deb (@BjpBiplab) July 26, 2021