கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை

பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 மேல் வசூலிக்கக்கூடாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்பிற்கு ஆண்டுக்கு ரூ.30,000 கட்டணம் நிர்ணயம் செய்திருந்தது என்றும் நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தது எனவும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மீண்டும் கல்வித்துறை கட்டணம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொறியியல் படிப்புக்கு தனியார் கல்லுரிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்தாக அமைச்சர் கூறியுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்