அந்நியன் படத்தில் சதாவுக்கு பதில் நடிக்க இருந்தது யார் தெரியுமா..?
அந்நியன் படத்தில் சதா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் என்று கூறப்படுகிறது.
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் படத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்நியன். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை சதா நடித்திருந்தார். படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் நடிகர் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று விதமான கதாபாத்திரத்திலும், வெவ்வேறு விதமான, நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பார்.
இந்த திரைபடம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மாபெரும் வெற்றி பெற்றது. தற்போது இந்த திரைப்படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த சதா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இந்த படத்தில் சதா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய் தானம் கால்ஷீட் காரணமாக அவரால் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.