வைரல் வீடியோ:நிலவு வரும்போது,சிக்னல் என நினைத்து மெதுவாக செல்லும் டெஸ்லா கார்…!

Default Image

நிலவு வரும்போது அதனை சிக்னல் என நினைத்து டெஸ்லா கார் மெதுவாக செல்வதாக கூறி காரின் உரிமையாளர்,வீடியோ ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின்,தயாரிப்புகளில் ஒன்றான டெஸ்லா கார்கள் பல காரணங்களுக்காக மிகவும் பிரபலமாகிவிட்டன. அவற்றில் ஒன்று தன்னியக்க பைலட் பயன்பாடு முறையாகும்,அதாவது,இது முழுவதும் தானாக இயங்கும் அம்சத்தை கொண்டுள்ளது.இதனால்,இந்த கார் பலரால் மிகவும் விரும்பத்தக்கதாக அமைகிறது.

இந்நிலையில்,டெஸ்லா காரில் உள்ள ஒரு சிக்கல் குறித்து ஜோர்தான் நெல்சன் என்பவர் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியதாவது:

“காரின் தானாக இயங்கும் அமைப்பில்,நிலவினால் ஏற்படும் சிக்கல் குறித்து,உங்கள் குழு பார்க்க வேண்டும்.ஏனெனில்,எதிரே நிலவு வரும்போதெல்லாம்,அதனை ஒரு மஞ்சள் போக்குவரத்து ஒளி என்று கருதி,கார் மெதுவாக இயங்குகிறது”,என்று தெரிவித்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அதாவது,நிலவு வரும்போதெல்லாம்,திரையில் ஒரு போக்குவரத்து சிக்னலைக் காட்டியது, அதில் மஞ்சள் ஒளி பிரகாசித்தது. இதன் காரணமாக,காரின் முன்னால் எதுவும் இல்லாத இடத்திலும் கார் மெதுவாகச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனைக் கண்ட நெட்டிசன்கள்,தங்களது பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்