#BREAKING : ஈபிஎஸ் – ஓபிஎஸ் பிரதமரிடம் பேசியது என்ன….? விளக்கமளித்த ஈபிஎஸ்…!
பிரதமர் மோடியை சந்தித்து பேசிய விடயங்கள் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டியளித்துள்ளார்.
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், இவர்கள் டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுனர். இந்த சந்திப்பின் போது, அதிமுக மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், தளவாய் சுந்தரம், தம்பி துறை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பேட்டியளித்துள்ளார். அப்போது பிரதமர் மோடியிடம் அவர்கள் பேசிய விடயங்கள் தொடர்பாக விளக்கி கூறினார். அவர் கூறியதாவது,
- தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினோம்.
- சட்ட பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட பிரதமருக்கு நன்றி தெரிவித்தோம்.
- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசுக்கு அனுமதி அளிக்க கூடாது என வலியுறுத்தினோம்.
- தமிழகத்தில் நீர் பற்றாக்குறையை போக்கும் வண்ணம், காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தோம்.
- இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம்.
அதிமுக தலைமை
செய்தியாளர்கள் அதிமுக தலைமை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், அதிமுக தலைமை மீது தொண்டர்களுக்கு எந்த அதிருப்தியும் இல்லை என தெரிவித்துள்ளார். தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காதவர்கள் அதிருப்தியில் கட்சியை விட்டு சென்றுள்ளனர். லாட்டரி சீட்டு விற்பனையை தமிழக அரசு மீண்டும் கொண்டுவரவில்லை என்றால் நல்லது தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதிலளிக்காமல், ஈபிஎஸ் நன்றி எனக் கூறிவிட்டு சென்றுள்ளார்.