TOKYO2020:மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு..!
பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க நிகழ்ச்சிகளுடன் கடந்த ஜூலை 23 ஆம் தேதி அதிகாரப்பூா்வமாகத் தொடங்கிய நிலையில்,பல்வேறு தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி,கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு,ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அவுட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தை உறுதி செய்தார். இதனால்,தற்போது நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா வென்றுள்ள முதல் பதக்கமாக இது கருத்தப்படுகிறது.மேலும், இதில்,சீனாவின் ஹோ சிஹாய் 210 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கத்தை வென்றார்
தங்கப்பதக்க வாய்ப்பு:
ஒலிம்பிக் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானுவுக்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏனெனில்,49 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹோ சிஹாய்க்கு ஊக்க மருந்து சோதனை நடைபெறுவதால் மீராபாய்க்கு தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.
Tokyo Olympics: Weightlifter Hou to be tested by anti-doping authorities, silver medallist Chanu stands chance to get medal upgrade
Read @ANI Story | https://t.co/6dn9GPlA2e#OlympicGames #TokyoOlympics pic.twitter.com/dxJqZpxlux
— ANI Digital (@ani_digital) July 26, 2021