ஓடிடியில் வெளியாகிறதா கவினின் லிப்ட்..? தயாரிப்பு நிறுவனம் விளக்கம்.!
லிப்ட் திரைப்படம் 100% ரசிகர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இயக்குனர் வினித் வரபிரசாத் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள திரைப்படம் லிப்ட். இந்த படத்தில் நடிகர் கவினுக்கு ஜோடியாக நடிகை அமிர்த அமலா நடித்துள்ளார். படத்தை லிப்ரா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் பிரிட்டோ மைக்கல் இசையமைத்துள்ளார். படத்தின் பர்ஸ்ட் லுக் பஸ்டர், மோஷன் போஸ்டர், இரண்டு பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப்பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்நிலையில், படத்தின் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சில திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது. அந்த வகையில், லிப்ட் திரைப்படமும் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்தது.
தற்போது இதற்கான விளக்கத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லிப்ரா நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் “லிப்ட் திரைப்படம் 100% ரசிகர்கள் திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்ட பிறகு வெளியாகும். படம் நேரடி ஓடிடியில் வெளியாகும் என்று பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மேலும், படத்தின் சவுண்ட் இஞ்ஜினியர் படத்திற்கான ஒலி அமைப்புகளை தியேட்டருக்கு ஏற்றவாறு மெருகேற்றி வருகிறார்”என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Lift update: we hereby confirming official. Lift movie will hit theatres with 100% occupancy.please do not believe the rumors it wil be direct OTT. Sound engineer Tapas nayak working on sound level with lot concentration as the movie demands. Perfect theatre motivation movie.
— LIBRA Productions (@LIBRAProduc) July 25, 2021